டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வர் பங்கேற்பு

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.

தேசிய விருது வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இன்று தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பயணம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார்.

பிரசாரம் நிறைவு

குஜராத் சட்டப் பேரவையின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

ரயில் மறியல் போராட்டம்

தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வலியுறுத்தி கோவையில், இன்று 33 அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

மகா தேரோட்டம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்தில் இன்றுமுதல் 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதன்படி இன்று, ‘ஏ’ பிரிவில் முதல் இடம் பிடித்த நெதர்லாந்து ‘பி’ பிரிவில் 2வது இடம் பிடித்த அமெரிக்காவுடனும், ‘சி’ பிரிவில் முதல் இடம் பிடித்த அர்ஜென்டினா ‘டி’ பிரிவில் 2வது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடனும் மோத இருக்கின்றன.

பெட்ரோல், டீசல் நிலவரம்

தொடர்ந்து 196வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வானிலை நிலவரம்

கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: அமலாக்கத் துறை வழக்கு; மாசெக்கள் கூட்டத்தில் ஐ.பி. ஆப்சென்ட் பின்னணி! 

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.