கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! top 10 news December 25
இன்று (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்
ரஷ்யா செல்லும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் 29ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் தமிழிசை
தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட உள்ளார்.
மழை அப்டேட்!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாஜ்பாய் பிறந்தநாள்!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில், இன்று தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
கொரோனா தொற்று!
தமிழ்நாட்டில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 583-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புரோ கபடி!
10-வது புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
புதிய பயிற்சி திட்டங்கள்!
நல்லாட்சி தினத்தையொட்டி, அரசு ஊழியா்களுக்கான புதிய பயிற்சித் திட்டங்களை இன்று மத்திய அரசு தொடங்கவுள்ளது.
சிறப்பு ரயில்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று, நாகர்கோயில்-சென்னை இடையே சிறப்பு ரயிலும், சென்னை-கோழிக்கோடு இடையே வந்தே பாரத் ரயிலும் இயக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!
டிஜிட்டல் திண்ணை: நிர்மலா பேட்டியால் கொதித்த தமிழ்நாடு- சமாளிக்க மோடி எடுத்த அவசர ஆக்ஷன்!
top 10 news December 25