பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
கி.வீரமணி பிறந்த நாள் விழா
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
அதிமுக போராட்டம்
கோவையில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
திருவண்ணாமலை வெள்ளி தேரோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
உலகக்கோப்பை கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ’ஹெச்’ பிரிவில் தென்கொரியா – போர்ச்சுகல் ஆகிய அணிகளும், கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளும் மோத இருக்கின்றன.
விஜய ஹசாரே இறுதிப்போட்டி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று செளராஷ்டிரா – மகாராஷ்டிரா ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.
கட்டா குஸ்தி ரிலீஸ்
நடிகர் விஷ்ணு விஷாலின் ’கட்டா குஸ்தி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதுபோல் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., தெற்கத்தி வீரன், ரிவெட், மஞ்சக்குருவி உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளில் இன்று வெளியாக இருக்கின்றன.
ஓடிடியில் ரிலீஸ்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து ரசிகர்களிடம் வரவேற்பையும், வசூலையும் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதுபோல் ‘பரோல்’, ‘மிரள்’, ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களும், வதந்தி வெப் தொடரும் இன்று ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன.
பெட்ரோல், டீசல் நிலவரம்
தொடர்ந்து 195வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வானிலை நிலவரம்
கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!
குஜராத்தில் குறைந்த வாக்குப்பதிவு!