டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஜி 20 தலைமைப் பொறுப்பு

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இன்றுமுதல் ஏற்க இருக்கிறது இந்தியா. இதையடுத்து, நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல்

குஜராத்தில் இன்று (டிசம்பர் 1) 89 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. 788 வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் இங்குள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநருடன் சட்ட அமைச்சர் சந்திப்பு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ’எஃப்’ பிரிவில் குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளும் கனடா மற்றும் மொராக்கா ஆகிய அணிகளும் மோத இருக்கின்றன. இ பிரிவில் ஜப்பான் – ஸ்பெயின் அணிகளும், கோஸ்டாரிகா – ஜெர்மனி அணிகளும் மோத இருக்கின்றன.

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட்

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கும் இங்கிலாந்து, அவ்வணியுடன் இன்று முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸ்

புதுமுக இயக்குநர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் உருவான காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம், இன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

வடிவேலு பட டிரைலர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் நிலவரம்

தொடர்ந்து 194வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வானிலை நிலவரம்

கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெண்டர் வழக்கு: வேலுமணி தப்பித்தது எப்படி?

கிச்சன் கீர்த்தனா: கீரை கபாப்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.