டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

அமைச்சரவை கூட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 26) காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது‌.

சிறை நிரப்பும் போராட்டம்!

திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும், கோவை பாஜக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

தசரா திருவிழா!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மைசூர் தசரா திருவிழாவை இன்று துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நளினி மனு விசாரணை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

நேற்று (செப்டம்பர் 25) ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசைக் காற்றின் மேக வேறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கள்ளக்குறிச்சி வழக்கு!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மாணவி தாயார் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 128-ஆவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சூர்யா 42 லீக் வீடியோ!

சூர்யா 42 படப்பிடிப்புத் தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் கசியவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆ. ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.