சுங்க கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 1) முதல் உளுந்தூர்பேட்டை, மதுரை, விக்கிரவாண்டி, சமயபுரம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார் பந்தயம்!
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில், சாலையில் நடைபெறும் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்று தகுதி சுற்று போட்டி நடைபெறவுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது. ரூ.1,817 ஆக இருந்த சிலிண்டர் விலை இன்று ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பூலித்தேவன் பிறந்தநாள்!
சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் அமைச்சா்கள், அரசியல் தலைவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
6 நாட்களுக்கு மழை!
தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹேப்பி ஸ்ட்ரீட் – போக்குவரத்து மாற்றம்!
J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் இன்று காலை முதல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை!
பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை மீண்டும் இன்று முதல் தொடங்குகிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் உறுப்பினராக பிரதமர் மோடி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ளவுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 168வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.
வன்கொடுமை வழக்குகள் – மோடி பேச்சு!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த நீதித்துறை தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்!
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும், அக்டோபர் 8 எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்… காரணம் இதுதான்!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!