10 சதவிகித இட ஒதுக்கீடு!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (நவம்பர் 7) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ராணுவ தளபதிகள் மாநாடு!
ராணுவ தளபதிகள் உச்சி மாநாடு டெல்லியில் இன்று முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
செஞ்சட்டை பேரணி!
இன்று மாலை 4 மணியளவில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் செஞ்சட்டை பேரணி நடைபெற உள்ளது.
கமல் பிறந்தநாள்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அக்கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
புரோ கபடி லீக்!
இன்று புரோ கபடி போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் மும்பை மற்றும் பிங் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வந்தே பாரத் ரயில்!
இன்று சென்னை – மைசூர் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
சென்னை மக்களுக்கு கொசு வலை!
தமிழக அரசு சார்பில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு இன்று முதல் கொசு வலை வழங்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 170-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.