டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

மோடி இந்தோனேஷியா பயணம்!

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று( நவம்பர் 14)இந்தோனேஷியா செல்கிறார்.

மழை வெள்ள பாதிப்பு ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை, வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினம்!

முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நாய் சேகர் பாடல்!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அப்பத்தா பாடல் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 177-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புரோ கபடி போட்டி!

இன்று புரோ கபடி போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று 67-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் மேற்கொள்கிறார்.

கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்டாலின் பயணம்- ரூட் மாற்றம்? பதற்றத்தில் அதிகாரிகள்! 

பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்! 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0