டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

மனதின் குரல்!

இன்று (டிசம்பர் 25) காலை 11.30 மணியளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.

கிறிஸ்துமஸ் விழா!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள் விழா!

கோவை மாவட்டத்தில் இன்று 25 ஆயிரம் பேருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

வாஜ்பாய் பிறந்தநாள்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

பெங்களூரு புத்தக திருவிழா!

பெங்களூரில் இன்று முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை தமிழ் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

துணிவு பாடல் வெளியீடு!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற கேங்ஸ்டா பாடல் இன்று வெளியாகிறது.

நாம் தமிழர் நிகழ்ச்சி!

வேலு நாச்சியார் 226-வது நினைவு நாள் மற்றும் கீழ் வெண்மணி 54-வது வீர வணக்க நாள் நிகழ்வு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத்துறை தலைவருமான கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 218-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“விஜய் தான் சூப்பர்ஸ்டார்னு சொன்னப்போ கலைஞரே ஆச்சரியப்பட்டார்! ஆனா..!” – சரத்குமார்

பிரபல இயக்குநர் குறித்து பேச நடிகைக்கு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel