மத்திய அமைச்சரவை கூட்டம்!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்டோபர் 12) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அமமுக ஆர்ப்பாட்டம்!
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அமமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் 34-வது நாளாக, கர்நாடக மாநிலம் சித்தரதுர்கா பகுதியில் தொடங்கி ஹயர்ஹல்லி பகுதியில் நிறைவடைகிறது.
இந்திய அணி வெற்றி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கண்ணாயிரம் தீம் மியூசிக் வெளியீடு!
சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் தீம் மியூசிக் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 144-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்தார் திரைப்படம் அப்டேட்!
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
வானிலை நிலவரம்!
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
ஒடிசா அணி வெற்றி!
நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 4,570 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாடகைத் தாய்: எந்த விசாரணைக்கும் தயார்!- நயன், விக்கி தரப்பு எக்ஸ்குளூசிவ் தகவல்!
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!