டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

பால் விலை , சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 15) பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

கன மழை விடுமுறை!

கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாடு துவக்கம்!

இந்தோனேஷியாவில் இன்று ஜி 20 உச்சி மாநாடு துவங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

லவ் டுடே டிரைலர்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் தெலுங்கு டிரைலர் இன்று வெளியாகிறது.

திருமா புத்தகம்!

ஜெ.பரத் எழுதிய திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் நூல் சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இன்று வெளியிடப்படுகிறது.

10 சதவிகித இட ஒதுக்கீடு ஆலோசனை!

10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து திராவிடர் கழகம் சார்பில் சமூக அமைப்புகள் இன்று பெரியார் திடலில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 178-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று 68-வது நாள் நடைபயணத்தை மகாராஷ்டிரா மாநிலம் பாலேகான் பகுதியில் துவங்கி வாஷிம் பகுதியில் நிறைவு செய்கிறார்.

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது!

”எங்க அப்பத்தா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel