டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

கலைஞர் நூல்கள் வெளியீடு!

அண்ணா நூற்றாண்டு கலையரங்க வளாகத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், ஏ.எஸ் பன்னீர்செல்வன் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி வரலாறு மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

ஒற்றுமை நடைபயணம்!

டெல்லியில் இன்று ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியுடன் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கொரோனா பரிசோதனை!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எம்.ஜி.ஆர் நினைவு நாள்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, அமமுக சார்பில் இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

வாரிசு இசை வெளியீட்டு விழா!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பெரியார் நினைவு நாள்!

இன்று தந்தை பெரியார் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

பாஜக ஆலோசனை கூட்டம்!

கோவையில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 217-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மினி ஏலத்தில் சீறிபாய்ந்த சிஎஸ்கே : தொடரில் சாதிக்குமா? சளைக்குமா?

வாடிவாசலில் சூர்யா உறுதி: தயாரிப்பாளர் எஸ்.தாணு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel