பாஜக இளைஞரணி கூட்டம்!
பாஜக இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (டிசம்பர் 10) திருச்சியில் நடைபெறுகிறது.
மாண்டஸ் புயல் அப்டேட்!
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அதனை தொடர்ந்து, இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள் மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும்.
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தின விழா!
தூத்துக்குடியில் இன்று காலை 10 மணியளவில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தின விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.
பாபா ரீ ரிலீஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம் மோதல்!
இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
மாண்டஸ் புயல் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சல்லியர்கள் முதல் பாடல்!
தி.கிட்டு இயக்கிய சல்லியர்கள் படத்தின் ஊரே ஊரே என்ற முதல் பாடல் இன்று வெளியாகிறது.
கால்பந்து போட்டி!
ஃபிஃபா உலக கோப்பை காலிறுதி போட்டியில் இன்று மோரோக்கோ, போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 203-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாண்டஸ் : ‘கவனமா இருங்க’ – வீடியோ காலில் மு.க.ஸ்டாலின்
இயற்கையை காப்பது நம் கடமை: மு.க.ஸ்டாலின்