புகைப்பட கண்காட்சி!
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 17) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
குடிவாரி கணக்கெடுப்பு பொதுக்கூட்டம்!
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பாஜக ஆர்ப்பாட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பள்ளிகள் செயல்படும்!
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
குற்றாலம் அருவி திறப்பு!
தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
ஷ்ரத்தா கொலை வழக்கு!
ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஃப்தாப் பூனவாலா, ஜாமீன் கோரி டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
வானிலை நிலவரம்!
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதல்!
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 210-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2022-ல் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா?
பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்: வார்த்தைகளை குறித்து வைக்கச் சொன்ன ராகுல்