டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

10 லட்சம் பேருக்கு வேலை!

இந்தியா முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும், மெகா வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்டோபர் 22) துவங்கி வைக்கிறார்.

சார்பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி 42வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் துவங்கி ஏக்னூர் பகுதியில் நிறைவு செய்கிறார்.

கங்குலி வேட்புமனு தாக்கல்!

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 154வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி!

இன்று உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 222பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 3,504பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரிசு முதல் பாடல்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து போட்டி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், இன்று மும்பை சிட்டி – ஜாம் ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

அனிருத் இசைக்கச்சேரி: போக்குவரத்து நெரிசலில் திணறும் ஈசிஆர்!

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *