டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

top 10 news august17

திமுக பயிற்சி பாசறை கூட்டம்

தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 17) தமிழ்நாடு  முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

ஜி20 கூட்டம்

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் இன்று முதல் 19 ஆம் தேதி வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற உள்ளது.

சந்திராயன் 3 அப்டேட்

சந்திரயான் – 3 விண்கலத்தின் நிலவு சுற்றுப் பாதை நேற்று குறைக்கப்பட்ட நிலையில் இன்று லேண்டர் பிரிக்கப்படுகிறது.

குடற்புழு நீக்க முகாம்

தமிழ்நாட்டில் இன்று குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. 2.69 கோடி பேருக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் பிறந்த நாள்

விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது 61 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அமைச்சர் பொன்முடி வழக்கு

செம்மன் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில், முதல் சாட்சியான அப்போதைய வானூர் தாசில்தார் குமாரபாலன் இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

அண்ணாமலை நடைபயணம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார்.

கிக் டீஸர்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று தொடர்ந்து 453-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

10 ஆயிரம் மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share