மதுரை செல்லும் ஸ்டாலின்
டி. எம் சவுந்திரராஜன் சிலை திறப்புவிழா மற்றும் ராமநாதபுரம், மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் விதமாக 3 நாள் பயணமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 16) மதுரை செல்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை!
ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை நடை திறப்பு!
ஆவணி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி!
இன்று சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
மழை அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சந்திராயன் 3!
நிலவை ஆராய சென்றுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு குறைக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
தமிழ்நாட்டில் 452 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காவிரி நீர் – உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
காவிரி நீர் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று முறையிட உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை!
கொடைக்கானல் மலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிச்சன் கீர்த்தனா: ராகி கொழுக்கட்டை!
டிஜிட்டல் திண்ணை: மதுரை மாநாட்டுக்கு முன் தேவர் நினைவிடம் செல்கிறாரா எடப்பாடி?
அண்ணாமலை வீட்டில் தேசியக் கொடி ஏற்றாதது ஏன்?
’முதலிடம் பிடித்தும் தகுதியில்லையா?’: ஒலிம்பிக் வீராங்கனை வேதனை!