ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, 2017ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், 600 பக்கங்கள் கொண்ட முழு விசாரணை அறிக்கையை இன்று (ஆகஸ்ட் 27) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று முதல் துவங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை,ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்துசெப்டம்பர் 11ஆம் தேதி வரை 3 கட்டமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் தொடர்ந்து எந்தவித மாற்றமுமில்லாமல் 98ஆவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுக்கிறது.
கொரோனா அப்டேட்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 628 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 5,407 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய கால்பந்து அமைப்புக்கான தடை நீக்கம்
அகில இந்திய கால்பந்து சம்மேளத்தின் மீதான தடையே ஃபிபா நீக்கியுள்ளது. இதனால் 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும்.
ரஜினிகாந்த் 170ஆவது படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவருடைய அடுத்தபடத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக போராட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட்ட திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
ஸ்ரீமதி தாய்– முதலமைச்சர் சந்திப்பு!
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்.
உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி யு.யு லலித் பதவியேற்பு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து இந்தியாவின் 49ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
மாமனாரைக் கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப்போகிறார் : ஜெயக்குமார்