டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

சென்னை தின கொண்டாட்டம்!

சென்னை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 21 ஆகிய நாட்களில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ளப் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது!

அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு முதலில் கலந்தாய்வு நடக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் விற்பனையாகிறது. 91ஆவது நாளாக இன்று மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

மத்திய உள்துறை செயலாளர் பதவிக் காலம் நீட்டிப்பு!

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு மேலும் ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்துள்ளது.

ராஜீவ்காந்தி பிறந்தநாள் இன்று!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தத் திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ஒண்டி வீரன் நினைவு நாள்!

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளான இன்று, பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபம் அருகில் நடக்கும் விழாவில், அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது. இதனைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொள்கிறார்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 வாரமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

இரண்டாவது ஒருநாள் போட்டி!

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 12.45 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் போட்டிக்கான தொடரை வெல்லும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மின்தடை – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் ஏற்படவுள்ள மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கவோ விற்கவோ தடை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தி தமிழகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தூய்மை பணி – பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்!

பள்ளிகளில் நடைபெறும் தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. 100 நாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க…

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *