ராமநாதபுரத்தில் முதல்வர்!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையையொட்டி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட்18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்: அமைச்சர் ஆலோசனை!
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, தொழிற்சங்கங்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அசல் மதிப்பெண் சான்றிதழ்!
2022-2023 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு!
ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 454வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
இன்று முதல் கட்டாயம்!
கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் 4 சான்றிதழ்கள் கட்டாயம் என வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒருநாள் விடுமுறை!
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி, இன்று பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டி20 போட்டி!
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது.
கால்நடை மருத்துவ முகாம்!
மதுரை மேலூர் கொட்டக்குடியில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!