ஐஸ் கிரீம் தொழிற்சாலை!
சேலத்தில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 13) காலை 10.30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மழை காரணமாக 14 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகப்பட்டுள்ளது.
சீமான் மாணவர்களுடன் உரையாடல்!
சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள திரு இருதய குருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிறப்பு அமர்வில் பேசுகிறார்.
கால்பந்து அரையிறுதி!
ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் இன்று அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி இன்று 97-வது நாளாக ஒற்றுமை நடைபயணத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜினாபூர் பகுதியில் துவங்கி டப்பி பனாஸ் பகுதியில் நிறைவு செய்கிறார்.
வானிலை நிலவரம்!
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிடிவி தினகரன் பிறந்தநாள்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அக்கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 205-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சை சேலத்துக்கு புதிய அமைச்சர்கள் ?
ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!