விசாரணை அறிக்கை தாக்கல்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்படுகிறது.
ஆண்டனியோ குட்டரெஸ் இந்தியா வருகை!
மூன்று நாட்கள் பயணமாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இன்று இந்தியா வருகிறார்.
பிரதமர் மோடி உரை!
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
இந்தி திணிப்பு போராட்டம்!
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு எதிராக இந்திய வாலிபர் சங்கம் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நமிபியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,074 பேர் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
UUNCHAI டிரைலர் வெளியீடு!
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த UUNCHAI படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
பிசிசிஐ புதிய தலைவர்!
பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 150-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸுக்கு நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும்: கார்த்தி சிதம்பரம்
ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச சிலிண்டர்கள்: குஜராத் அரசின் தீபாவளி பரிசு!