டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

அண்ணாமலை ட்விட்டர் ஸ்பேஸ்!

மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 8) இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் 28-வது நாளை கர்நாடக மாநிலம் துருவக்ரே பகுதியில் தொடங்கி, தும்கூர் பகுதியில் நிறைவு செய்கிறார்.

குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்!

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

கேரளா அணி வெற்றி!

நேற்று (அக்டோபர் 7) நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கார்த்தியுடன் மோதும் சிவ கார்த்திகேயன்

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார், அனுதீப் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படங்கள் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாக உள்ளன.‌

வானிலை நிலவரம்!

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழகம் முழுவதும் இருந்து திருக்குறள் புத்தகங்கள் அனுப்பும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இன்று துவங்குகிறது.

போக்குவரத்து மாற்றம்!

சென்னை லஸ் சர்ச் சாலையில், மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இன்று முதல் ஒரு வாரத்திற்கு லஸ் சந்திப்பிலிருந்து, லஸ் சர்ச் சாலை வழியாக டிடிகே சாலைக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 140-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை: ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி-அன்புமணி

நேற்று எருமை…இன்று பசு: மீண்டும் சேதமான மோடி ரயில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.