டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

அதிமுக எம்.எல்.ஏ கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று (அக்டோபர் 16) மாலை 5 மணிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பு!

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புகளை இன்று மத்திய பிரதேச மாநிலத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

சிப்காட் எதிர்ப்பு போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட் தொழில் வளாகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று 36-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கர்நாடக மாநிலம் சங்கநாக்கல்லு பகுதியில் துவங்கி அல்லூர் பகுதியில் நிறைவு செய்கிறார்.

உலக கோப்பை டி20 போட்டி!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் இன்று மோதுகின்றன.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 148-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கப்பா டீசர் வெளியீடு!

மலையாள இயக்குனர் வேணு இயக்கத்தில் பிருத்திவிராஜ் நடித்த கப்பா படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.

ஜூனியர் கால்பந்து போட்டி!

6 அணிகள் பங்கேற்கும் சென்னை ஜூனியர் லீக் கால்பந்து போட்டி சென்னையை அடுத்த படூரில் இன்று துவங்குகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 285 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பினால் 4,162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லுங்கியில் லோக்கல் டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்

திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி: அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel