பாஜக பொதுக்கூட்டம்!
கோவையில் இன்று (டிசம்பர் 27) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார்.
வரலாற்று பேரவை மாநாடு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-ஆவது மாநாட்டை (Indian History Congress 81st Session) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு!
இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
புதிய உறுப்பினர் அறிமுக விழா!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது.
பூங்கா திறப்பு!
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல் செயல்படும்.
மண்டல பூஜை!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 220-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பால் விலை உயர்வு!
டெல்லியில் மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ள நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வானிலை நிலவரம்!
இலங்கை கடல்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா: இறால் பாப்ஸ்
மாணவி தாலி வழக்கு: விசாரணை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம்!