அதிமுக பொதுக்குழு வழக்கு!
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று (நவம்பர் 21) இறுதி விசாரணை நடைபெற உள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்!
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும்.
மின்சாரம் தடை!
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக, அடையாறு பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
ஜிப்மர் மருத்துவமனையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் 26.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கால்பந்து போட்டி!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நெதர்லாந்து, செனகல் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, ஈரான் அணிகள் மோதுகின்றன.
சூப்பர் குட் பிலிம்ஸ் புதிய படம்!
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 184-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 515 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாரி செல்வராஜ் படம்!
மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
சென்னைக்குக் காத்திருக்கும் கனமழை: வெதர்மேன் எச்சரிக்கை!
ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்!