அதிமுக பொதுக்குழு வழக்கு!
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வருகிறது.
ரஜினி சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்கிறார்.
தமிழ் இணைய மாநாடு!
21 ஆவது தமிழ் இணைய மாநாடு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது.
ரயில் போக்குவரத்து ரத்து!
மழை மற்றும் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் உதகமண்டலம் இடையேயான நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசை கச்சேரி!
காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இசைஞானி இளையராஜா இன்று இசை கச்சேரி நடந்த உள்ளார்.
வானிலை நிலவரம்!
இன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை கார் வழக்கு!
கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் 5 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புகைப்பட கண்காட்சி!
மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த 3 நாள் புகைப்பட கண்காட்சி சேலத்தில் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 208-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புரோ கபடி அரையிறுதி!
புரோ கபடி அரையிறுதி போட்டியில் இன்று ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.
வங்கதேச டெஸ்ட்: ஏமாற்றிய சீனியர் இந்திய வீரர்கள்!
போக்குவரத்துக்கு இடையூறு : யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!