டாப் 10 நியூஸ்: திமுக மா.செ.கூட்டம் முதல் கனமழை வரை!

அரசியல்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 16) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விண்ணில் பாயும் செயற்கைகோள்!
புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து இன்று  விண்ணில் செலுத்தப்படுகிறது.

அதிமுக கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில்  இன்று தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச்  செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

எங்கெங்கு மழை! 
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.

மருத்துவ படிப்பு – அகில இந்திய ஒதுக்கீட்டு இடம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று முதல் இடங்களைத் தோ்வு செய்யலாம் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

நாகை – இலங்கை கப்பல் சேவை!
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.காலை 10 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, காங்கேசன் துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு கப்பல் சென்றடையும்.

வாஜ்பாய் நினைவு தினம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அடல் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

அம்ரித் உத்யன் தோட்டம் திறப்பு!
‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் இன்று முதல் வரும் செப்டம்பர் 15 வரை ஒரு மாத காலம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.

சபரிமலை கோயில் நடை திறப்பு!
ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 152-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமெரிக்க – உலக முரணில் ஒன்றியத்தின் நகர்வு என்ன? பகுதி 4

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ஸ்டாலின் மீது கூட்டணித் தலைவர்கள் வருத்தம்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *