டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

5ஜி சேவை அறிமுகம்!

டெல்லியில் இன்று (அக்டோபர் 1) நடைபெறும் இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, இந்தியாவின் முக்கியமான நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதல்வர் கேரளா பயணம்!

கேரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார்.

ஆளுநர் மாளிகை கொலு!

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவினை இன்று முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன் பிறந்தநாள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, அடையாறு சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி!

ரெஸ்ட் ஆஃப் இந்தியா, சவுராஷ்டிரா அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 133-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நடைமேடை கட்டணம் உயர்வு!

சென்னை கோட்டத்திற்குட்பட்ட எட்டு ரயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வெற்றி!

நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

பொன்னியின் செல்வன்: விமர்சனம்!

விளையாட்டுத் தனமாக பேசினேன்: ஓசி சர்ச்சைக்கு பொன்முடி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *