டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.111.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 840 புதிய அடுக்குமாடி  குடியிருப்பு கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 12)  மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறார்.

பொங்கல் டிக்கெட் முன்பதிவு!

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 12)  காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

குடியுரிமை சட்டதிருத்தம் விசாரணை!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான 288 பொதுநல வழக்குகள் இன்று (செப்டம்பர் 12) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

வானிலை நிலவரம்!

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் இன்று (செப்டம்பர் 12)  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆசிய கோப்பையை கைப்பற்றிய இலங்கை

நேற்று (செப்டம்பர் 11)  நடந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.

சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி!

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி இன்று (செப்டம்பர் 12) சென்னையில் தொடங்கி  வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதிமுக அலுவலக சாவி வழக்கு

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) 114-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வாரிசு படம் அப்டேட்!

இளைய தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செளந்தர்யா ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாமனிதன் வைகோ: நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.