டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

ஜெயக்குமார் நில மோசடி வழக்கு!

நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 13) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

யுஜிசி நெட் தேர்வு ஹால் டிக்கெட்!

2022 ஜூன் யுஜிசி நெட் தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ள என்டிஏ, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று (செப்டம்பர் 13)  முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நிலக்கரி ஏலம் இன்று தொடங்குகிறது!

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான  ஏலத்தில்  பங்கேற்க நிலக்கரி அமைச்சகம் அழைப்பு விடுத்தது. இதற்கான தொழில்நுட்ப மதிப்பீடு முடிவடைந்துள்ளதையடுத்து 10 நிலக்கரி சுரங்கங்களுக்கான இணைய வழியிலான ஏலம் இன்று (செப்டம்பர் 13)  தொடங்குகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4, 839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (செப்டம்பர் 13)  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்ககூடும். இதனால் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று (செப்டம்பர் 13) பதவி ஏற்கிறார்.

ராகுல் 7-ஆம் நாள் நடைபயணம்!

ராகுல் காந்தி 7-ஆம் நாள் நடைபயணத்தை கேரள மாநிலம் கனியாபுரம் பகுதியில் தொடங்கி கள்ளம்பலம் என்ற பகுதியில் நிறைவு செய்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று (செப்டம்பர் 13)  115-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஷ்வின் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *