டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஆன்லைன் சூதாட்டம் : முதல்வர் ஆலோசனை!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று சசிகலா பிறந்தநாள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பிறந்தநாள் இன்று. முன்னதாக, பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம் என்று சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 89ஆவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

குறைந்து வரும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,60,810 ஆக அதிகரித்துள்ளது. இதில் 35,16,146 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

அதிமுக அலுவலக வழக்கு : உச்ச நீதிமன்றம் விசாரணை!
அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
அதிக விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும், தரமான மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் சென்னையை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் 20 ஆயிரம் எம்.சாண்ட் மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்துகிறது.

மின்கட்டணம் – சிபிஐ(எம்) போராட்டம்!
மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் போராட்டம் நடைபெறுகிறது.

வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்!
தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் காலை 7 மணிக்கு வெளியானது. இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். கலாநிதி மாறன் தயாரிப்பில் படம் வெளியாகியுள்ளது.

இந்தியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர்!
இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில், லோகேஷ் ராகுல் கேப்டன் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? – ராமதாஸ்

+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0