தாயாதி உரிமையாம் திராவிடம் !

Published On:

| By Minnambalam Desk

Today we are Reading Periyar

ஸ்ரீராம் சர்மா Today we are Reading Periyar

பெரியார் குறித்து நிருபர் ஒருவரால் கேட்கப்பட்டதொரு கேள்விக்கு, தனக்கே உரிய பொறுமையோடும் அரசாண்மையோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறாக பதிலளித்தார்…

“மரியாதைக் குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை…”

சுருக்கமாக முடித்து விட்ட முதலமைச்சரின் அந்த பதிலை திராவிட நாகரிகத்தின் ஆகச் சிறந்த அடையாளம் எனலாம். Today we are Reading Periyar

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
Today we are Reading Periyar

படாடோபம் இல்லாமல், கடும் சொல் உமிழாமல் இருக்கும் ஓர் அரசனை இந்த உலகம் கொண்டாடும் என்கிறார் புகழுடைய நம் திராவிடத் தமிழ்த்திரு மண்ணில் உதித்த ஈடிணையற்ற பேராசான் திருவள்ளுவர்!

*******

“தமிழ், தமிழினம் என்று தனித்து பேசுபவர்களால் இந்த இனத்துக்கு ஆபத்து” என அன்று பெரியார் சொன்னார். “அப்படியென்றால் அவர் சொன்ன அந்த இனம் எந்த இனம்?” என ஈரோடு கிழக்குத் தேர்தல் மேடையில் தனியாக நிற்க வாய்ப்பு அமையப் பெற்ற சிலர் இதுதான் சாக்கு என மனம்போன போக்கில் அடித்தொண்டை கீறலோடு உள்ளங்கையைக் காட்டி உறுமுகிறார்கள்.

முதலில் பெரியார் அப்படிப் பேசினாரா என்பது தெரியவில்லை. அப்படிப் பேசியிருந்தால் அதன் பொருள் என்ன என்பதை அவர்கள் தெரிந்து கேட்கிறார்களா, தெரியாமல் கேட்கிறார்களா? தெரியவில்லை. போகட்டும்.

அந்த இனம், எந்த இனம் என்பதை திராவிடக் கலாச்சாரத்துக்கே உரித்தான நாகரிக மொழி கொண்டு முடிந்தவரை எளிமையாக்கி அவர்களுக்கு மெல்ல விளக்குவோம்!

*******

அகண்டதாம் இந்தியப் பெருநிலத்தில், திராவிடம் என்பது செழித்த தனித்த கலாச்சார விழுமியங்களை கொண்டதோர் நிலப்பரப்பு ஆகும். அதில் நிறைந்து வாழ்ந்தவர்கள் திராவிட இனத்தார் ஆவார்கள்.

Today we are Reading Periyar

திராவிட இனத்தின் மூத்த மொழி தமிழ்மொழியே ஆகும். Today we are Reading Periyar

அந்த செம்மாந்த மொழியினோடு ஊன்றி உறவாடி தொல்காப்பியமாக, திருக்குறளாக, ஐம்பெரும் காப்பியங்களாக அள்ளி வீசி உலகுக்கே வழிகாட்டி வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள் தமிழர்கள் ஆவர். தமிழிலிருந்து கிளைத்த உதர மொழிகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியனவாகும். அந்தந்த செம்மாந்த மொழிகளை தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் எனப்படுபவர்களாம்.

மேலெழுந்த மொழிகளைப் பேசுபவர்கள் தங்களது ஆதி மொழியான தமிழோடும் தமிழர்களோடும் தாங்கள் கொண்ட தொப்பூழ் கொடி உறவினை, நீண்ட நெடிய அந்த வரலாற்று மேன்மையினை இன்றளவும் மிகப் புனிதமானதாகவே கருதுகின்றார்கள்.

அவர்களை எல்லாம் அரவணைத்தபடி தனக்கே உரிய தாயாதி உரிமையோடு, மொழிவழி மாகாணப் பிரிவுக்கு முன்பிருந்த திராவிட அடையாளம் அதனை ஓங்கிப் பிடித்தபடி செழித்து நிற்கின்றது நம் தமிழ்நாடு.

அவ்வளவுதானே? இதில் குழப்பம் எதற்கு? குழப்பம் ஒன்று இருப்பதாக கலகம் செய்து என்ன பயன்?

*******

எளிமையானதொரு உதாரணத்தோடு காண்போம். Today we are Reading Periyar

புகழுடைய அந்த ஊரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் தமிழ் மீடியம், தெலுங்கு மீடியம், கன்னட மீடியம், மலையாள மீடியம் எனத் தனித்தனி வகுப்பறைகள் உள்ளது எனக் கொள்வோம்.

அதில் ஒரு மீடியம் சார்ந்த மாணவர்கள் மட்டும் வெறிகொண்டு எழுந்து…

என் தாத்தன் விற்ற நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம் இது. இதற்கு கல் சுமந்து வந்தவர்கள் எனது முன்னோர்கள்தான். ஆகவே, இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான பள்ளி. நீங்களெல்லாம் வந்து படித்தவர்கள் மட்டுமே. அதனால் நீங்கள் படித்த சான்றிதழ்கள் எல்லாம் செல்லாது என அழிச்சாட்டியம் செய்தால் அது எந்த வகையான நியாயமாகும்?

உயர்த்தி வைத்த அந்த உயர்நிலைப் பள்ளியின் மேன்மைக்கு சேதாரம் உண்டாக்கி வைப்பது எந்த வகையான நாகரிகம்? நன்றி மறந்த கலகச் செயலல்லவா அது? அதனால் பலன் பெறப் போவது யார்? Today we are Reading Periyar

நான்கு கால்களால் முன்னேறி நடக்கும் சிங்கத்தைக் கண்டு காடே அஞ்சும்.
அதன் ஒரு கால் மட்டும் பின்னே இழுத்துக் கொண்டு போனால் என்னவாகும்?
இதோ பார், சுகவீனப்பட்ட சிங்கம் ஒன்று இழுத்துக்கொண்டே நகர்கிறது என உயரே பறக்கும் கழுகுகள் காட்டிக் கொடுக்கும். குடல் வெறி கொண்ட ஓநாய்கள் சூழ்ந்து கொள்ளும். கொல்லும்.

*******

இந்திய தேசம் விடுதலை கண்ட அந்த ஆகஸ்ட் நள்ளிரவில் மற்ற பிரதேசங்கள் எப்படியாக இருந்ததோ தெரியாது. ஆனால், திராவிடப் பிரதேசமானது மிக மிக உயிர்ப்போடு இருந்தது!
அன்று வாழ்ந்த பல்துறை அறிஞர்களும் திராவிடத் திருமண்ணின் தனித்த பெருமைகளை உயர்த்தி இறுக்கிப் பிடித்தாக வேண்டும் என அவரவரளவில் முனைந்தார்கள்! தத்துவம் – பொருளாதாரம் – காவியம் – ஓவியம் – நாட்டியம் – சிற்பம் – கட்டடம் – மருத்துவம்  என சகல துறைகளிலும் மூறி எழுந்தார்கள்.

குறிப்பாக, 1949-ல் பேரறிஞர் அண்ணா அவர்களால் துவங்கப்பட்ட அந்த அரசியல் முஸ்தீபு சகலரையும் அரவணைத்தபடி உரம் போட்டு வளர்த்தது எனலாம். அவரைத் தொட்டு எழுந்த கலைஞரும் தனது ஆட்சிக் காலங்களில் தேடித் தேடி திறன் வளர்த்தார்.  

அன்றவர்கள் கடந்த பாதையானது சுகமானதல்ல. சொகுசானதல்ல. மெல்ல மெல்ல நகர்த்தி மேன்மை கண்டதே திராவிடப் பாரம்பரியத்தின் வரலாறு.

அந்த ஆழ்ந்த அனுபவம்தான் இன்று அவர்களை அவசரப்படாமல் இயங்கச் செய்கிறது. இன்றதற்கு நேரிடை சாட்சியாக இருக்கிறார் தமிழகத்தின் முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின். தன்னை நோக்கி தன் தகப்பனை நோக்கி தன் தங்கையை நோக்கி அரசியல் என்னும் பேரில் தனிப்பட்ட தாக்குதல்களை வீசி எறிபவர்களின் மேல் சினம் கொள்ளாது பொறுத்துப் போகும் அவரது தன்மையினை திராவிடக் கலாச்சாரத்தின் உச்சம் எனலாம்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்

“எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்” என்கிறார் மேற்கண்ட குறளுக்கு பொருள் விளக்கம் எழுதிய முத்தமிழறிஞர் கலைஞர்.  

*******

திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு என நீட்டி முழக்குபவர்கள் மனப்பாடக் கில்லாடிகளாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறியாதவர்களாக வெளுத்துப் போகிறார்கள்.

திராவிடத் தொட்டிலாடுகிறாள் தமிழன்னை என்னும் தலைப்பில் 19.9.2021 அன்று மின்னம்பலத்தில் முன்பு எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் இங்கே பதிய விரும்புகிறேன்.

வரலாற்று உண்மையினை சொல்கிறேன் கேளுங்கள்.

விடுதலைக்குப் பிறகு தென்னக தலைமைக்கான வல்லாட்டங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறிய அன்றைய ஒன்றியம், அவசரப்பட்டு கண்டடைந்த வழிதான் மொழிவாரி மாகாணப் பிரிவுகள்.  என்னதான் பிரித்தாலும் திராவிட மண்ணின் ஆதியும் நீதியுமானது தமிழ்நாடே! ஆம், திராவிடம் என்னும் அடையாளத்தை எவராலும் அழிக்க முடியாது. Today we are Reading Periyar

கண்ணாரக் காணும் இந்திய வரைபடம் அதைத்தான் முன்மொழிகிறது. காதாரக் கேட்கும் ‘திராவிட உத்கல…’ என்னும் இந்திய தேசிய கீதத்தின் வரிகளும் அதனையே வழிமொழிகிறது!

சங்கத்தமிழில் திராவிடம் என்ற சொல் உள்ளதா? என மூளை கசக்கப் பார்க்கும் சிலரின் மன அழுக்கை எந்த சலவைச் சாலையில் வைத்து வெளுப்பது?

Today we are Reading Periyar

சங்க காலத்தில் இருந்த எல்லைகள் வேறுபட்டது. சேர சோழ பாண்டியர்கள் தங்கள் அரசாட்சியில் கண்ட எல்லைகளும் வேறுபட்டது. சுல்தானிய ஆட்சியிலும் அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியிலும் அமைந்த எல்லைக் கோடுகள் அனைத்தும் வேறு வேறுபட்டது என்பதை உணராது போனதால் எழும் அபத்தக் கேள்விதான் அது.

பின் எழுந்த எல்லைக் கோட்பாடே திராவிடம் ஆகும்! அது, தென்னகம் ஆகும்! தமிழ் தேசியமானது திராவிடத் தீப்பிழம்பின் உள்நாக்கு என்பதை உணர்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டு அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று வரையிலும் நம்மால் மனமுருகப் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்…’ எனப் போற்றுகிறார் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை!

அவர் சொல்லும் தக்காண பீடபூமி (Deccan Plateau) என்பது ஏறத்தாழ ஏழு லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையதாகும். ‘அதில் சிறந்த திராவிட நல்திருநாடு’ என அவர் பாடுவது தக்காணத்திற்கு முக்கால் பாகம் கொண்டது. எனில், அது ஆந்திர, கர்நாடக, கேரள எல்லைகளை உள்ளடக்கியதாகவே கொள்ள முடிகிறது!

அது போக, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்கள் இன்று அமைந்திருக்கும் கேரள நாட்டில். ஆலப்புழாவில் பிறந்தவர்.

அன்றந்த நாளில் மொத்தமும் திராவிட நாடாகத்தான் இருந்திருக்கிறது என்பதை எப்படித்தான் இவர்களுக்கு புரியவைப்பது?  

1897-ல் மறைந்த பிள்ளையவர்கள் திராவிடம் என்னும் எல்லைக் கோட்பாட்டை தன்னெழுச்சியாகவே அறுதியிட்டு சொல்லிச் சென்றார் என்பதை எந்த மலையேறி இவர்களுக்கு சொல்வது?

குறித்துக்கொள்ளுங்கள்… தமிழ் மொழி அன்றைய நாளில் ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டருக்கு பரவலாகப் பேசப்பட்ட மொழி. அதனால்தான் அதனை திராவிட மொழி என்கிறோம்!

அதனில் இருந்து கிளைத்த செழித்த மொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிகள் என்பது போதும் போதுமெனும் அளவுக்கு ஆய்ந்து சொல்லப்பட்டாகிவிட்டது!

இந்திய வரைபடம் தென்னகத்தைப் பிரித்துக் காட்டுவதன் காரணம் என்ன? அது வடமாநில கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்ட தனித்த பிரதேசம் என்பதால்தானே?

அப்படிக்கொள்வது இந்திய தேசியத்துக்கு அப்பாற்பட்டதாகி விடாது. திராவிடம் என்பது இந்தியத்தின் பெருங்கூறு!

Today we are Reading Periyar

போலவே, சமஸ்கிருதம் என்பதை வட மாநிலங்களுக்கு மட்டுமே சொந்தமானது என தம்பட்டமடித்துக் கொள்ளவும் முடியாது. அதுவும், திராவிடப் பெருமண்ணில் திரண்டு புழங்கிய மொழியே! ஆதியில் அதன் செறிவுகளை தன்னுள் அடக்கிச் செழித்த முதல் மொழி தமிழே!

தமிழைக் காட்டிலும் மேலதிக சொற்களைப் புணர்ந்ததால், மற்ற மற்ற  மொழிகள் தாய்த் திராவிட தமிழில் இருந்து சற்றே விலகி அதனதன் வட்டார வழக்கையும் கொண்டு கூட்டிச் செழித்தன.

*******

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு! புகழ், கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று தானே பாடினார் என பாரதியாரை துணைக்கு அழைக்கிறார்கள்.

பாரதியார் பாடிய ஆண்டு 1920. அன்று ஒட்டுமொத்த திராவிடப் பிரதேசத்திலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்திருந்தார்கள். அதனால்தான் அப்படிப் பாடினார்.

மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டது 1956-ல் தான்.

குறித்துக்கொள்ளுங்கள்…. இன்றளவும் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அனைவரையும் “மதறாஸிகள்” என்றே அடையாளப்படுத்தி அழைக்கின்றனர் வட  மாநிலப் பெருமக்கள்.

காரணம், அவர்களைப் பொறுத்தவரை நாமனைவரும் ஒன்றே!

ஆகவேதான், “நான் திராவிடன்” எனும் மரபார்ந்த தாயாதி உரிமையோடு மூறி முழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*******

முடிவாக, Today we are Reading Periyar

திராவிட அரசியல் பரப்பில் தனிக்கடை ஒன்றை விரிக்கும் வாய்ப்பமைந்தவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். ஜனநாயகக் கோட்பாட்டுப் பரப்பில் உங்களை கேள்வி கேட்க முடியாதுதான், உங்கள் ஆவலாதிக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்தான்.

எல்லோரையும் அரவணைப்பதாய் எண்ணிக்கொண்டு எல்லோரையும் பகைத்துக் கொள்வதுதான் உங்கள் விருப்பம் எனிலதனை எனது எழுத்து கொண்டு தடுக்க முடியாதுதான்.  ஆனால், தயவுசெய்து நாகரிகமாக களமாடுங்கள்.

குறிப்பாக சொல்கிறேன். திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை நோக்கிய உங்களது அநாகரிகமான அர்ச்சனைகளை நிறுத்துங்கள்.

‘கருவறை வாசனை’ எழுதிய அந்த மென்மகளை காயப்படுத்தாதீர்கள்.

சொல்லுங்கள், தனிப்பட்ட வாழ்வில் அல்லல்கள் பல கடந்தேறி மாநிலங்களவை – மக்களவை உறுப்பினராக உயர்ந்து நின்று பொதுவாழ்வில் சாதித்து வருமொரு தன்னிகரற்றதோர் பெண் மகளை புறம்பேசி நீங்கள் காணப் போவதுதான் என்ன?

இதழியலாளராக, இலக்கிய மனம் சார்ந்தவராக, இயல்பில் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தபோதிலும் அநீதி கண்டு வெகுண்டெழுமோர் பெண் போராளியாக, சாதி மதம் பாராது அனைவரிடத்திலும் பேரன்பு செலுத்துபவராக, இன்று இளவயதுடைய மகனுக்கோர் அன்னையாக, அரை நூற்றாண்டுக் கால வயதினை கடந்தும் ஓயாது உழைக்கும் மூத்த அரசியலாளராக ஒளிவீசி வருபவர் கனிமொழி கருணாநிதி.

அப்படிப்பட்டவரை நீச மொழி கொண்டு ஏசலாகுமா? அதை உலகார்ந்த தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?

கவனியுங்கள்! Today we are Reading Periyar

நாகரிகத்தோடு செய்யப்படுவதுதான் அரசியல். அநாகரிகத்தோடு செய்யப்படுவது அனைத்தும் பாழரசியல் என்றே அழைக்கப்படும்!

“பெண் ஒருவளை அழித்தொழிக்க வேண்டுமென்றால், முதலில் அவளது மானத்தைக் குறிவைத்து அடிக்க வேண்டும்” என்பது பதினெட்டாம் நூற்றாண்டு வேலுநாச்சியார் வரலாற்றில் தோற்று ஓடிய கிழக்கிந்திய கும்பினியினர் செய்த சதித்தனமாகும்.

அந்த தில்லாலங்கடித்தனம் இன்று தோற்றுப் போய்விட்டது. தோற்றுப் போனவனின் வழிமுறையினை தொடர்ந்தால் நீங்களும் தோற்றுத்தான் போவீர்கள்.

அன்றந்த திராவிடத் தென்மதுரையில், “பரவுக தீயே” என எதிரியை நோக்கி சீறிய சிலப்பதிகாரக் கண்ணகியாளது போர்க்குணம் நமத்துப் போய்விட்டதாக எண்ணி விடாதீர்கள்.

அது, ரணப்பட்ட கனிமொழியின் ரத்தத்திலும் ஊறியிருக்கும் என்பதை உணருங்கள்.
போதும் நிறுத்துங்கள்! Today we are Reading Periyar

*******

கட்டுரையாளர் குறிப்பு     

Today we are Reading Periyar by Shriram sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share