டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

இன்று (ஜூலை 18) குடியரசுத் தலைவர் தேர்தல்!
இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள்.
தனியார் பள்ளிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை ஒட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை.
மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சின்னசேலம் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது. இவர்களைத் தவிரக் கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேர் கைது.
பெட்ரோல் டீசல் விலை!
இன்று 58ஆவது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை

நீட் எழுதிய 18 லட்சம் மாணவர்கள்!
2022-23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வை 18 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். திருவாரூரில் தந்தை மற்றும் மகன் தேர்வு எழுதிய சுவாரஸ்யம்.
வீடு திரும்புகிறார் ஸ்டாலின்
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.

சிங்கப்பூரிலிருந்து கோத்தபய வெளியேற உத்தரவு!
சிங்கப்பூரிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேற உத்தரவு. கோத்தபயவுக்கு அடைக்கலம் தர சிங்கப்பூர் அரசு மறுப்பு.
இன்று தமிழ்நாடு நாள்!
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு குறித்த சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி. இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜி யீயை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து கைப்பற்றினார்.

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.