பிரதமர் மோடி கேரளா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, இன்று (செப்டம்பர் 1) கேரளா செல்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!
தமிழகம் முழுவதும் இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் பிரின்ஸ் படத்தின் பாடல்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தை அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் காட்சி வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா
ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 31) ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது.
வானிலை நிலவரம்
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றை இத்தடுப்பூசி குணமாக்கும்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தமிழகத்தில் இன்று 103-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று முதல் நெல் கொள்முதல்
விவசாயிகளின் நலன் கருதி 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதல் இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது. குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையோடு, நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் புதிய அப்டேட்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இன்று காலை 11 மணியளவில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. இதில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் எகிறும் டோல்கேட் கட்டணம்!