நீயா நானா? நீக்கி விளையாடும் பன்னீர் எடப்பாடி
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பன்னீர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவரது மகன்களான ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடியை நீக்கிய பன்னீர்
எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் என 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம். யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது என்று கண்டனமும் தெரிவித்துள்ளார் பன்னீர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை – சிங்கப்பூர் அரசு!
கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்றும், அவர் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டார் எனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கையாக பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை 14 ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.1,000 உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம்!
அரசுப் பள்ளியில் பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 18 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை. இன்று (ஜூலை 15) பெட்ரோல் லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.25 ரூபாய்க்கும் விற்பனை.
உலக அழகியை டேட் செய்யும் லலித் மோடி
ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடி, தனது ட்விட்டரில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ’இறுதியாக புதிய வாழ்க்கை தொடக்கம்’ என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டும்தான் என்றும் லலித் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் நடிகர் விஜய்க்கு அபாரதம் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த விஜய் மனு மீது இன்று (ஜூலை 15) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி தோல்வி!
2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. 246 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லே 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என்ற கணக்கில் உள்ளது .