today anbumani ramadoss protest

நிலத்தை மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி-க்காக பொதுமக்களிடம் இருந்து கையகபடுத்திய நிலத்தை மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து இன்று (ஜூலை 28) நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும்  கோஷங்களை எழுப்பினர்.

அப்போது , அவர்கள் என்.எல்.சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போது கைது செய்து போலீசார் வகனத்தில் ஏற்றினர்.

அன்புமணி கைது செய்யப்பட்ட போது போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,”முற்றுகை போராட்டம் அமைதியான முறையிலே நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள விலைநிலங்களை கையகப்படுத்தி என்.எல்.சி நிர்வாகத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க கூடாது என்பதே எங்கள் கோரிக்கை.

என்.எல்.சி நிறுவனம் சுமார் 66 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் மூன்று தலைமுறையாக இந்த மண்ணையும் , மக்களையும் இந்நிறுவனம் நாசப்படுத்தியுள்ளது.

எட்டு அடியில் இருந்த நிலத்தடி நீர் என்.எல்.சி நிறுவனத்தால் இன்றைக்கு 800 அடிக்கு சென்றுவிட்டது. இங்கு உள்ளூர் மக்களுக்கு வேலை இல்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை இல்லை. தமிழ்நாட்டில் முதலீடும் இல்லை. இனி இந்த என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆழமான கோரிக்கை . இது வெறும் கடலூர் மாவட்ட பிரச்சினை மட்டும் இல்லை.

இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. கதிர் விடுகின்ற நெற்பயிர்களை பொக்லைன் வைத்து அழிக்கும் காட்சிகளை எல்லாம் பார்த்து எங்களுக்கு தூக்கம் கூட வரவில்லை.

அதனால் தான் நான் இந்த போரட்டத்திற்கு கிளம்பி வந்தேன். மக்களையும், இந்த மண்ணையும் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஓரு வருடமாக பத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், நடைபயணம், பொதுக்கூட்டம், கடையடைப்பு, கிராம சபை கூட்ட தீர்மானம் உள்ளிட்டவற்றை பாமக நடத்தியுள்ளது. இந்த நிலத்தை இப்போது விட்டுவிட்டோம் என்றாம் இனி எப்போதும் நமக்கு கிடைக்காது.

அமைதியாக சென்றுகொண்டிருந்த எங்கள் போராட்டம் காவல்துறையின் பிரச்சினையால் … அவர்கள் எங்கள் தொண்டர்களை அடித்து மண்டையை உடைத்ததால் பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அது சரி ஆகிவிட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்.எல்.சி நிர்வாகத்திற்காக பொதுமக்களிடம் இருந்து கையகபடுத்திய நிலத்தை அரசு மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வன்முறையாக மாறிய பாமகவின் என்.எல்.சி முற்றுகை போராட்டம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts