டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

இன்று 13 மாவட்டங்களில் கனமழை!

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக திருவாரூர் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பட்டமளிப்பு விழா!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்கள் வழங்குகிறார்.

ஜி20 மாநாடு

ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு மாநாடு மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 19) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

ராகுல் காந்தி பிறந்த நாள்!

இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள். நாடு முழுவதும் ராகுலின் பிறந்தநாளை கொண்டாட காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை.

சென்னையில் 394ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று (ஜூன் 19), பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சிந்தனை அமர்வு!

பாதுகாப்புத் துறை சார்பில் இன்றும் நாளையும் டெல்லியில் சிந்தனை அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

துணை மருத்துவப் படிப்பு!

பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

4ஆவது நாள் ஆட்டம் !

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

கிச்சன் கீர்த்தனா: தக்காளி இடியாப்பம்!

குஷ்புவை இழிவாக பேசிய திமுக பேச்சாளர்: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *