டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் தமிழக அரசு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றார்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிப்பதற்கான பரிந்துரை, அவர் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பாகவே அரசுத் தரப்பில் இருந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் சில விளக்கங்களை கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
இந்தநிலையில் ஆளுநர் அனுப்பிய கேள்விகளுக்கு விளக்கங்களுடன் தமிழக அரசு பதிலளித்து மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது.
செல்வம்
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்!
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறையை சாடிய உயர்நீதிமன்றம்!