சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின் படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் என நீதிமன்றங்களில் வந்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டக் கருத்துரை மதுரையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் இன்று (ஜூலை 1) வெளியிடப்பட்டது.
சட்டக் கருத்துரையை வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “சிதம்பரம் நடராஜர் கோவில் மக்களுக்கு சொந்தமான கோவில், கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் மக்களுக்கான கோவில் என உறுதியாகி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நிர்வாகம் செய்யலாம், சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்குகளில் மக்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளது.
1890, 1936, 1951, 1954, 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்கே சொந்தம் என கூறிப்பிடப்பட்டு உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின் படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். சிற்றம்பல மேடைக்கு செல்வதை தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்.
சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைத்தால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் அதனை வைப்பதில்லை. அர்ச்சனை சீட்டு தருவதில்லை.
தாங்கள் முறைகேடாக சம்பாதிக்க வேண்டும் என்பதால் தற்போது தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் போன்று சிதம்பரம் கோவிலையும் தமிழக தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத சடங்குகளில் தமிழ்நாடு அரசு தலையிடவில்லை. அதே போல திமுகவும் எந்த கோவில் வழிபாட்டிலும் தலையிடவில்லை.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தம் என எந்தவொரு ஆதாரமும் இல்லை. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அறங்காவலர்கள் போல செயல்பட்டு வருகிறார்கள்.
கோவில் வழக்குகளில் அனைவரும் வழிபடும் உரிமை நிலைநாட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது” என வாஞ்சிநாதன் கூறினார்
ராமலிங்கம்
”பல உண்மை சம்பவங்களின் தொகுப்பே மாமன்னன்”: பட்டியலிட்ட திருமாவளவன்