|

ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் இயங்க அனுமதி!

ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மேலும் 5 ஆண்டுகள் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மற்றும் சிசிடிவி கேமிராக்கள் இல்லாததால் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக் காட்டிய குறைகளை சரிசெய்த 3 மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும், அதற்கான அறிக்கையை சமர்ப்பித்தன. மேலும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ)அதிகாரிகள் டெல்லி சென்று விளக்கம் அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணைய குழுவினரும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 5ஆம் தேதி வந்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் மேலும் 5 ஆண்டுகள் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொது கவுன்சிலிங் என்ற திட்டத்தை எதிர்த்து மாநில அரசு சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொது கவுன்சிலிங் இல்லை என்றும், மாநில அரசுகளே கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

முதல்வரின் தீர்க்கமான வழிகாட்டுதலின்படி இன்று மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும் அவர், “மருத்துவ கல்விக்குழு அதிகாரிகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்தார்கள்.

அதன்படி நேற்றிரவு இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ரத்து செய்து அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மேலும் 5 ஆண்டுகள் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தோனி தயாரிக்கும் எல்.ஜி.எம். டீசர்: சொல்ல வருவது என்ன?

ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி அப்டேட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts