tn special assembly for return bills

பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது!

அரசியல்

தமிழ்நாடு அரசு அனுப்பி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு இன்று (நவம்பர் 16) திருப்பி அனுப்பி உள்ளார். tn special assembly for return bills

இதனையடுத்து வரும் 18ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ’ஆளுநர் நீண்ட நாட்களாக மசோதாக்களை  நிலுவையில் வைத்திருக்க கூடாது. இது கண்டனத்திற்குரியது’ என தெரிவித்திருந்தனர்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகத்திற்கு இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.

எனினும் ஏன் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன என்பதற்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் வரும் சனிக்கிழமை (நவம்பர் 18) நடைபெறும் என அரசு தற்போது அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 20ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்குள்ளாக ஆளுநருக்கு மசோதாக்களை திருப்பி அனுப்ப அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

பொதுவாக மாநில சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் எதிரொலியாகவே தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். tn special assembly for return bills

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அரசு மரியாதையுடன் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா உடல் தகனம்!

வங்கக்கடலில் உருவாகிறது ‘மிதிலி’ புயல்: தமிழகத்திற்கு மழை இருக்கா?

WorldCup 2023: 48 வருஷத்துல இதான் பர்ஸ்ட்… கோலி, ரோஹித், ஷமி உடைச்ச ரெக்கார்டுகளை பாருங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *