ஆட்சி பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப்ரல் 21) நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின் உள்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.
அவர் பேசுகையில், “இன்னும் 2 வாரத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மிக மோசமான நிதி நெருக்கடி, மத்திய அரசின் உதவியின்மை ஆகிவற்றுக்கு இடையில் பல்வேறு சாதனைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
மகளிருக்கு கட்டணமில்லா பயணவசதி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்.
மாநில உள்நாட்டு உற்பத்தி, வேளாண் உற்பத்தி ஆகியவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது திமுக கட்சியின் அரசு மட்டுமல்ல, சமூகநீதி, சுயமரியாதை, வளர்ச்சி என அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், “முன்னதாக பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது துறையின் மானிய கோரிக்கையின் போது, கலைஞரின் பேச்சை சுட்டிக்காட்டினார்.
நாம் வகிக்கும் ஒவ்வொரு துறைகள் வேறுபட்டிருந்தாலும், நாம் அனைவரும் அண்ணாதுரையை சார்ந்தவர்கள் என்று கலைஞர் கூறினார்.
அதேபோல் எனக்கு முதலில் ஐயாதுரை என்று பெயர் வைக்க நினைத்தார் கலைஞர் . எனவே, நீங்கள் வேறு வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தாலும், ஐயாதுரையின் நாளங்கள் தான்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!
மம்மூட்டியின் தாயார் காலமானார்!