போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 10) அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட பல இடங்களை தலைமையிடங்களாக கொண்டு அரசுப்போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசின் மற்ற துறைகளில் பணியாற்ற ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்களது பி.எப்., கிராஜூவிட்டி, விடுப்பு சம்பளம் உட்பட பல்வேறு பணப்பலன்கள் காலதாமதமின்றி உடனடியாக வழங்கப்படுகிறது.
ஆனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மட்டும் தங்களுக்குரிய பணப்பலன்களை பெற சிரமப்படுகின்றனர்.
இதனையடுத்து பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள பணப்பலன்களை விடுவிக்க கோரி போக்குவரத்து சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை பரிசீலித்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2022 டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பயனடையும் வகையில் ரூ. 38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.4.3 கோடி,
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.8 கோடி,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு.
விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.5.8 கோடி,
சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.3.6 கோடி,
மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.3.2 கோடி,
நெல்லை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.2.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை இறந்த தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள், 50% வருங்கால வைப்புத் தொகையும் இந்த நிதி ஒதுக்கீட்டில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோழி செய்த சேட்டை… பழைய ஜீன்சில் பயிர் வளர்த்த பலே சிறுவன்!