சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று (மார்ச் 24) ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு 2வது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டமன்ற்த்தில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்றிரவு தமிழ்நாடு அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு மசோதாவின் அனைத்து பக்கங்களும் இன்று காலையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ஒரு சட்டம் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்பது விதி.
அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது மீண்டும் மறுப்பு தெரிவிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
கிறிஸ்டோபர் ஜெமா
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
மூளையில் ரத்தக்கசிவு:லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ