தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் இன்று(மார்ச் 23) சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றார்.
அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமித் ஷா, ஆளுநர் சந்தித்து பேசியுள்ளார்.அப்போது, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உட்பட நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆன்லைன் ரம்மி தடை குறித்து சட்டமியற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் அதுகுறித்தும் அமித்ஷாவுடன் ஆளுநர் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.என்.ரவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்!
’ட்ரோல் மெட்டீரியல்’ மந்தனா?: மீண்டும் புஸ்வானமான ஆர்.சி.பியின் கனவு!