கூட்டுறவுத் துறையின் மாவட்ட ஆள் தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 2,257 காலி பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்ப கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் கூட்டுறவுத் துறை மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2,257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத் துறை தனியாக ஆள் தேர்வு நடத்துவது நியாயமற்றது.
கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆள் தேர்வு அறிக்கையை திரும்பப் பெற்று அந்தப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறையின் மாவட்ட ஆள் தேர்வு மையங்களை கலைக்கவும் ஆணையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் மழை: தேயிலைக்கு உரமிடும் பணிகளில் நீலகிரி விவசாயிகள் தீவிரம்!
பியூட்டி டிப்ஸ்: கண்களுக்குக் கீழே கருவளையமா… கவலை வேண்டாம்!