பினராயி விஜயனுக்கு, ஸ்டாலின் அளித்த பரிசு!

அரசியல்

தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) கேரளாவுக்கு சென்ற நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள உள்ள நிலையில், தென் மாநிலங்களில் நிலவும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை, உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

அங்கிருந்து கோவளம் சென்ற ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார்.

tn cm mk stalin met kerala cm

புத்தகம் பரிசளித்த ஸ்டாலின்!

மேலும் இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை அவரிடம் ஸ்டாலின் வழங்கினார். அப்போது முனைவர் கலையரசன், பேராசிரியர் விஜயபாஸ்கர் எழுதிய ’The Dravidian Model’ என்ற புத்தகத்தையும் பரிசளித்தார்.

இந்த சந்திப்பில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

tn cm mk stalin met kerala cm

நாளை காலை 10 மணிக்கு தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது. கேரள அரசுடன் இணக்கமான உறவைப் பேணி வரும் முதல்வர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு சாதகமான பதில்களைப் பெற்று வருவாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் அண்டை மாநிலங்களுடனான முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கேரள முதல்வரின் குற்றச்சாட்டும் தமிழக முதல்வரின் கேரளப் பயணமும்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *