தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 26) பிற்பகல் சந்திக்க உள்ளார்.
திமுகவின் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளின் சொத்து பட்டியலையும் வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் பார்ட் 4 வரை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக சொத்து பட்டியல் பாகம் 2-ஐ அண்ணாமலை வெளியிட உள்ளார். இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அண்ணாமலை நேரில் சந்திக்க உள்ளார்.
அப்போது திமுக சொத்து பட்டியல் பாகம் 2-ஐ ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாஸ்மாக்கில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோனிஷா
இந்திய அணி கேப்டனுக்கு தண்டனை : வரவேற்ற பாகிஸ்தான் ஜாம்பவான்!
புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டிய கடன் செயலி: இளைஞர் தற்கொலை!