அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு… திட்டமிட்டு செய்தாரா அண்ணாமலை? லீக் ஆன ஆடியோவால் பரபரப்பு!

அரசியல்

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது, பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் தொடர்பாக அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது.

கடந்த 11ம் தேதி காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்தார்.

அதனைதொடர்ந்து 13ம் தேதி மதுரை விமான நிலையத்துக்கு வந்த லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது காரில் புறப்பட்டார்.

அப்போது, அவருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிட்ட நிலையில் அவர் சென்ற கார் மீது செருப்பு வீசியது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

tn bjp annamalai's audio

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து புகைப்படங்கள், வீடியோக்களில் இடம்பெற்ற பாஜகவினரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு முன்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது.

சுசீந்திரனிடம் அண்ணாமலை பேசுவது போல் இருக்கும் அந்த ஆடியோவில், ’அண்ணே ஏர்ப்போர்டில் எதும் பிரச்சனை உள்ளதா? எத்தனை பேர் இருக்கிறார்கள்,

எல்லோரையும் விமான நிலையத்திற்கு வர சொல்லுங்கள்’ என்றும், ’மாஸாக பண்ண வேண்டும், கிராண்ட் ஆக பண்ண வேண்டும்’ என்றும், ’இதை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்’ என்றும் பதிவாகி உள்ளது.

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகா சுசீந்திரன் மறுப்பு!

அண்ணாமலையின் இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து ஆடியோ குறித்த பேச்சு தொடர்பாக மகா சுசீந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ”இது தில்லுமுல்லு திமுகவின் வேலை தான். அதில் உள்ளது என்னுடைய குரல் இல்லை.

அண்ணாமலை கூட்டங்கள் மற்றும் பிற இடங்களில் பேசியதை எல்லாம் சேர்த்து ஆடியோவாக வெளியிட்டுள்ளனர்.

செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக, அன்றைக்கு நான் அண்ணாமலையிடம் பேசவில்லை. அவரும் யாரிடமும் பேசவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

காது குத்து யாருக்கு? : திமுக எம்.எல்.ஏ. மொய் விருந்து குறித்து அண்ணாமலை விமர்சனம்!

+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *